BREAKING NEWS

குற்றம்

தஞ்சை அருகே சூரியம்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் முகமது யூசுப் நீரில் மூழ்கி பலி. தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தஞ்சை மருங்குளம் சாலை நாஞ்சிகோட்டை அருகே உள்ள சூரியன் பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் காலை கிராம மக்கள் குளிக்கச் சென்றபோது குளத்தில் சிறுவனது உடல் கிடைப்பதைக் கண்டு காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை தாலுகா காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலை கரைக்கு எடுத்து யார் என விசாரித்ததில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனியை சேர்ந்த முகமது ரபீக் இவரது மகன் முகம்மது யூசுப் 19 சற்று மனநிலை பாதிக்கப் பட்டவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ள நிலையில் காவல்துறையினர் அவருக்கு தகவல் அளித்து தாய் தந்தையை வரவழைத்த பொழுது தனது மகன் தான் என உறுதிப் படுத்தினர் இதையடுத்து அந்த இளைஞரின் உடலை கைப்பற்றிய தாலுகா காவல் துறையினர் கொலையா தற்கொலையா என விசாரணை செய்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )