கூடநகரம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக நிறைவு சிறப்பு பூஜை!
கூடநகரம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக நிறைவு சிறப்பு பூஜை!
வேலூர், ஆக.19-
கூட நகரம் ரோடு பார்வதியாபுரம் முனுசாமி பட்டி சுயம்பு சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
வேலூர் மாவட்டம், கூட நகரம் ஊராட்சி, பார்வதியாபுரம் முனுசாமி பட்டியில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ அருள்மிகு சக்தி மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ,வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து, தேங்காய், கற்பூரச் சுடர் ஏற்றி சிறப்பு பூஜை செய்தனர்.
இப் பூஜையில் பெங்களூரு எம். முனுசாமி தனலட்சுமி குடும்பத்தினர் தலைமையில், டி. முனுசாமி எஸ். லதா, மற்றும் டீச்சர்ஸ் காலனி, பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகசாமி சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர் .கோயில் பூசாரி குப்பன் , காயத்ரி, கோவிந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி,
மற்றும் மதன், சேகர், கோமளா காயத்ரி விஜி ,சுரேஷ், மேல் ஆலங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பி.ஜி. பாலகோபால் சாந்தகுமாரி, காட்டு காளியம்மன் கோயில் நிர்வாகி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.