BREAKING NEWS

’கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா

’கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிப்பதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி? || Tamil cinema Suriya  karthi team up again

’மாநகரம்’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது படம், ’கைதி’. கார்த்தி, ’அஞ்சாதே’ நரேன், அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது அஜய்தேவ்கன் நடிப்பில் இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

‘கைதி’க்குப் பிறகு விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இப்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இதற்குப் பிறகு அவர், விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ’கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவர், இயக்க இருப்பதாகவும் அதில் கார்த்தியுடன் நடிகர் சூர்யாவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரே படத்தில் சூர்யா, கார்த்தி இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஆனால், இருவரும் சேர்ந்து நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்த வில்லை.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )