BREAKING NEWS

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள QR CODE கொண்ட வழித்தட வரைபடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்…

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் நிலவி வருகிறது. கோடை சீசன் நிலவி வருவதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகையில் உள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

குறிப்பாக உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கூகுள் மேப் மூலம் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முற்படுவதால் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனை தடுக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு என தயார் செய்யப்பட்டுள்ள QR CODE கொண்ட வழித்தட வரைபடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் இன்று துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 10ம் தேதி துவங்க உள்ள மலர் கண்காட்சிக்காக பாதுகாப்பு பணியில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் இரண்டு கம்பெனிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் என 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அதிக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் உதகை நகரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பின் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS