கோபிசெட்டிபாளையம் அருகே கடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளை வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டதனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே கடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளை வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டதுடன் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து பரிசுகளை வழங்கினர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பெரிய கொடிவேரி பகுதியில் புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1990 -91 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த பள்ளியில் கடந்த 1990 -91 ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பயின்றுள்ளார். அவர்கள் பள்ளிப் பருவம் முடித்து வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் 33 வருடங்களுக்கு பிறகு புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து விழா எடுக்க முன்னாள் மாணவர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஏற்பாடு செய்து வந்தார்
இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்து கோவை, திருப்பூர், வேலூர்,சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து முன்னாள் மாணவர்கள்,தங்களுடைய மகன், மகள், பேரன் பேத்திகள் என குடும்பத்துடன் கலந்து கொண்டனர்
விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளி பருவத்தில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொருவராக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவின் நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்திற்கு மரக்கன்றுகளை வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் பெரிய கொடிவேரி ஊராட்சி பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து பரிசுகளை வழங்கினர்