BREAKING NEWS

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் ஏற்கனவே இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் மூன்றாவதாக கோவை மருதமலை வனப் பகுதியில் மீட்கப்பட்ட குட்டி யானை முகாமிற்கு கொண்டுவரப்பட்டு மூன்று குட்டி யானைகளையும் பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மருதமலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 வயது பெண் காட்டு யானைக்கு சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தபோது குட்டியானை தாயிடமிருந்து பிரிந்து மற்ற கூட்டத்துடன் இருந்தது. இந்நிலையில் நான்கு நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு தாயான காட்டிற்குள் சென்றது.

இதனை அடுத்து மற்றொரு கூட்டத்துடன் இருந்த குட்டி யாயை பிரித்து வனத்துறையினர் தாயானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு குழுவாக வனத்துறையினர் தாய் மற்றும் குட்டி யானையை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு நாட்களுக்கும் மேலாக இந்த முயற்சி பலனை பலனளிக்காத நிலையில் குட்டி யானையின் உடல் நலனை கருத்தில் கொண்டு முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தாயைப் பிரிந்த குட்டி யானையை இன்று அதிகாலை கோவை மாவட்டம் மருதமலை பகுதியில் இருந்து வாகனத்தின் மூலம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டு குட்டி யானைகள் பராமரிக்கும் கரால் கூண்டில் அடைத்தனர்.

பின்னர், வனக்கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து யானை குட்டியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குட்டி யானையை பராமரிக்க பழங்குடியினர் பாகன்களை வனத்துறையினர் நியமித்தும் குட்டி யானைக்கு தேவையான பால் மற்றும் லாக்டோஜன் உள்ளிட்டவைகளை வழங்கி குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS