சத்துவாச்சாரியில் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி!
சத்துவாச்சாரியில் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதி!
வேலூர் சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவு நீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன் கொசுத் தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் துர்நாற்றமும் வீசத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களை அனுப்பி இந்த கழிவு நீரை முழுவதுமாக அகற்றி சாலையை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, ஆணையர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் இதில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி வாழ் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.