BREAKING NEWS

சினிமா

லிங்குசாமி படத்துக்காக சிம்பு பாடிய காதல் பாடல்!

actor simbu says after maanadu that he will continue to act in more movies

லிங்குசாமி இயக்கும் ’தி வாரியர்’ படத்துக்காக, நடிகர் சிம்பு காதல் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

விஷால் நடித்த ‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு ’தி வாரியர்’ என்ற படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். இதில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். இவர், தெலுங்கில் ‘உப்பெனா’, ‘ஷியாம் சிங்கா ராய்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆதி இதில் வில்லனாக நடிக்கிறார். அக்‌ஷரா கவுடா உட்பட பலர் நடிக்கின்றனர்.

லிங்குசாமி

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி – பவன் குமார் தயாரிக்கின்றனர். ஜூலை 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு காதல் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். சமீபத்தில் இதன் ரெக்கார்டிங் சென்னையில் நடந்துள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் அந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளார். பெண் குரலில் பாடுவது இன்னும் முடிவாகவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )