BREAKING NEWS

சினிமா

துல்கர், ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

துல்கர், ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துவரும் துல்கர் சல்மான், நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் அவர் ராணுவ அதிகாரியாக, ராம் என்ற கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார்.

ஸ்வப்ன சினிமா என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவர், காஷ்மீரைச் சேர்ந்த அஃப்ரீன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவர் பிறந்த நாளை முன்னிட்டு, ராஷ்மிகாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ’சீதா ராமம்’ என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா படமாக இந்தி, தமிழ், மலையாள மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. விஷால் சந்திரசேகர் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )