சினிமா
பழனி – ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அரசியல் பிரமுகர்கள் நடிகர்கள் என பல பிரபலங்கள் சுவாமி தரிசனம் செய்து வழக்கம். அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கார் மூலம் பழனி அடிவாரம் ரோப்கார் நிலையத்திற்கு வந்தார் பின்னர் அவர் ரோப்கார் மூலம் பழனி மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதைக்கண்ட ஏராளமான பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர். அவர்கள் ஆசையை நிறைவேற்றிய பின்னர் அவர் ரோப்கார் மூலம் அடிவாரம் சென்று அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக கடந்த சில நாட்களாக ஒட்டன்சத்திரம் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் சசிகுமார் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
