BREAKING NEWS

சினிமா

யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் : சாப்டர் 2 படம் ரஜினி பட சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள படம் ‘கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், ராக்கி பாய் என்ற கேரக்டரில் மிரட்டலாக நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தெலுங்கு மாநிலங்களில் இந்தப் படம் வசூல் சாதனைப் படைக்கும் என்று கூறப்படுகிறது.

இன்னும் சில கோடிகள்தான்: ரஜினி பட சாதனையை முறியடிக்கிறது `கே.ஜி.எஃப் 2’

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிக வசூலை ஈட்டிய டப்பிங் படங்களில் ரஜினிகாந்தின் ’2.0’ முதலிடத்தில் இருக்கிறது. அந்தப் படம் இரண்டு மாநிலங்களிலும் சேர்ந்து அதிகப்பட்சமாக ரூ.70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த சாதனை யை கே.ஜி.எஃப் 2 படம் முறியடிக்க இருக்கிறது.

வெளியான முதல் வாரத்தில் இந்தப் படம் தெலங்கானாவில் மட்டும் ரூ.33 கோடி வசூலித்துள்ளது. ஆந்திராவையும் சேர்த்து ரூ.64 கோடி வசூலித்துள்ளது. முதல் வாரத்திலேயே ஒரு டப்பிங் படம் செய்த வசூல் சாதனை இது என்கிறார்கள். இந்தப் படம் ரஜினியின் ’2.0’ பட வசூல் சாதனையை முறியடிக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )