BREAKING NEWS

சினிமா

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகை லட்சுமி.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் நடிகை லட்சுமி

நடிகை லட்சுமிக்கு நடிகர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருதை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்கினார்.

2017-ம் வருடத்துக்கான கன்னட திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் 94-வது பிறந்தநாள் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை விருதுகளை வழங்கினார்.

இதில் நடிகை லட்சுமிக்கு, ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருதும், பிரபல இயக்குநர் நாராயணனுக்கு புட்டண்ணா பெயரில் விருதும், மறைந்த தயாரிப்பாளர் லட்சுமிபதிக்கு டாக்டர் விஷ்ணுவர்தன் விருதும் வழங்கப்பட்டது. நடிகை லட்சுமிக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை விருதை வழங்கினார்.

விருது பெறும் நடிகை லட்சுமி

அப்போது பேசிய நடிகை லட்சுமி, “டாக்டர் ராஜ்குமார் பெயரில் கிடைத்துள்ள இந்த கவுரவத்தை ஆசிர்வாதமாக கருதுகிறேன்’’ என்று தெரிவித்தார்.

பசவராஜ் பொம்மை பேசும்போது, மைசூருவில் திரைப்பட நகரம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என்றும் தற்போதைய பட்ஜெட்டில், 125 கன்னடம் மற்றும் பிராந்திய படங்களுக்கு பதிலாக, 200 படங்களுக்கு மானியம் வழங்க அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )