BREAKING NEWS

சினிமா

சந்தானம் படத்தில் கிளாமர் ரோலில் நடிக்க இருப்பதாக ஜெயம் ரவி பட ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

சந்தானம் நடிப்பில் தமிழ், கன்னடத்தில் உருவாகும் படத்தின் தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடந்தது. இந்தப் படத்தை ஃபார்டியூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தை கன்னட இயக்குநர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற ஹிட் படங்களை இயக்கியவர். இதில் தன்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். இவர் தடம், தாராள பிரபு படங்களில் நடித்தவர்.

சந்தானம், தன்யா ஹோப்

மற்றும் பாக்யராஜ், பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூரலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ஷகிலா உட்பட பலர் நடிக்கின்றனர். நாயகனும், நாயகியும் வெவ்வேறு விளம்பர நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். இவர்கள் தொழில் போட்டியில் எலியும் பூனையுமாக மோதிக் கொள்வதுதான் கதை.

இந்தப் படத்தில், ஜெயம் ரவியின் ’நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்த ராகினி திவேதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தப் படத்தில் கிளாமர் கேரக்டரில் நடிக்கிறேன். ஆனால், ஸ்டைலிஷான வேடம். இயக்குநர் பிரசாந்த் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. சந்தானத்துடன் இதில் நடிப்பதில் மகிழ்ச்சி. அவர் திறமையான நடிகர். அதே நேரம் சுந்தர் சி படத்தில் இதற்கு எதிர்மாறான கேரக்டரில் நடிக்கிறேன்” என்றார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )