சினிமா
யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படம் உலக அளவில் ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதனைப் படைத்துள்ளது.

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள படம் ‘கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், ராக்கி பாய் என்ற கேரக்டரில் மிரட்டலாக நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். இவருடைய பின்னணி இசை பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் கடந்த 14-ம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை திரையுலகினரும் பாராட்டி வருகின்றனர். ரிலீஸ் ஆன நாளில் இருந்தே வசூலைக் குவித்து வரும் இந்தப் படம் சாதனைப் படைக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்பு தங்கல், பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய இந்திய படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் குவித்தன. அந்த வரிசையில் நான்காவதாக கே.ஜி.எஃப்: சாப்டர் 2 இடம்பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
