BREAKING NEWS

சினிமா

விஷால் நடிக்கும் ’மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியது.

விஷாலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா!

’வீரமே வாகை சூடும்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஷால், ‘லத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். வினோத்குமார் இயக்கும் இந்தப் படத்தை அடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ’மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் நடிக்கிறார், விஷால். ஆதிக், ’த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ’பாஹீரா’ படங்களை இயக்கியவர்.

‘எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டூடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. நாயகியாக ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ரிது வர்மா நடிக்கிறார். நிழல்கள் ரவி, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா உட்பட பலர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் உருவாக உள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியது. விஷால், எஸ்.ஜே.சூர்யா உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )