சினிமா
அன்னையர் தினமான இன்று தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
![]()
காதலர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு நீல் கிட்ச்லு என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அன்னையர் தினமான இன்று தன் மகனின் புகைப்படத்தை முதல்முறையாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
மகனின் புகைப்படத்தை வெளியிட்டு காஜல் கூறியிருப்பதாவது,
நீ எனக்கு எவ்வளவு விலைமதிப்பற்றவன் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எப்பொழுதுமே அப்படித் தான். உன்னை முதல் முறையாக என் கைகளில் வாங்கியபோது, உன் சிறு கையை என் கையால் பிடித்தபோது, உன் சுவாசத்தை உணர்ந்தபோது, உன் அழகிய கண்களை பார்த்தபோது, எப்பொழுதும் காதலில் என்பதை உணர்ந்தேன்.
நீ தான் என் முதல் குழந்தை. என் முதல் மகன். என் முதல் அனைத்துமே. இனி வரும் ஆண்டுகளில் என்னால் முடிந்தவற்றை உனக்கு கற்றுக்கொடுப்பேன். ஆனால் நீ ஏற்கனவே எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துவிட்டாய்.
தாயாக இருப்பதை கற்றுக் கொடுத்திருக்கிறாய். சுயநலமில்லாமல் இருக்க கற்றுக் கொடுத்தாய். உண்மையான அன்பு. என் உடம்புக்கு வெளியே என் இதயத்தின் ஒரு பகுதி இருக்க முடியும் என்பதை கற்றுக் கொடுத்தாய்.
அது பயமாக இருந்தாலும், அழகானது. இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது. கடவுள் உன்னை தேர்வு செய்திருக்கிறார்.
நீ வலிமையானவனாக, அன்பானவனாக வளர்வாய் என பிரார்த்தனை செய்கிறேன். நீ நம்பிக்கையுடன், அன்பாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டுகிறேன். அதை ஏற்கனவே உன்னில் பார்க்கிறேன். உன்னை என் மகன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்.
நீ என் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள். அதை ஒருபோதும் மறக்காதே என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
