BREAKING NEWS

சினிமா

ரஜினிகாந்த் பட நாயகிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரபல இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர், தமிழில், ரஜினிகாந்தின் ’லிங்கா’ படத்தில் அவர் ஜோடியாக நடித்திருந்தார். இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கையில் வைர மோதிரத்தை அணிந்திருக்கிறார். அது நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறப்படுகிறது. அவர் அருகில் நிற்கும் ஆணின் தோளில் சாய்ந்திருக்கிறார். முகத்தைக் காண்பிக்கவில்லை.

மற்றொரு புகைப்படத்தில் அந்த ஆணின் கை மட்டும் தெரிகிறது. அந்தப் பதிவில், ’இன்று எனக்கு முக்கியமான நாள். என் கனவுகளில் ஒன்று நனவாகிறது. உங்களிடம் பகிர்ந்துகொள்ள என்னால் காத்திருக்க முடியாது ’ என்று தெரிவித்துள்ளார். பாலிவுட் திரைபிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர், யார் அந்த அதிர்ஷ்டசாலி? என்று கேட்டுள்ளனர்.

நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவும் ‘நோட்புக்’ இந்திப் படத்தில் நடித்த ஜாகிர் இக்பாலும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவருடன் தான் சோனாக்‌ஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது. ஆனால், அதை சோனாக்‌ஷிதான் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )