BREAKING NEWS

சினிமா

ரஜினிக்கு மருமகனாக ஆசைப்பட்டதே இல்ல: ஷாக் கொடுத்த தனுஷ்.

பிரிந்து வாழும் தனுஷையும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால் மீண்டும் சேர்வதில் இருவருக்குமே விருப்பம் இல்லையாம்.

போதும், போதும் என்கிறார்களாம். இதையடுத்து தனுஷின் கெரியர் விஷயத்தில் லதா ரஜினிகாந்த் கவனம் செலுத்துகிறாராம். அதாவது தனக்கு தெரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை அணுகி தனுஷை வைத்து யாரும் படம் பண்ண வேண்டாம் என்கிறாராம்.

அது ஒர்க்அவுட்டாகத் துவங்கியிருக்கிறதாம். இந்நிலையில் தனுஷிடம் சமாதானம் பேச ரஜினி தரப்பில் இருந்து சென்றவர்கள் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏம்ப்பா, ரஜினி மருமகன் என்பதால் தானே உங்களின் கெரியர் நல்லபடியாக இருக்கிறது. இந்நிலையில் அவரின் மகளை பிரிந்தால் உங்களால் நிலைத்து நிற்க முடியுமா, இப்படி நன்றி மறக்கலாமா என்று கேட்டார்களாம்.

அதற்கு தனுஷோ, என் கெரியர் நன்றாக இருக்க ரஜினி காரணம் இல்லை. என் திறமை மட்டுமே காரணம். நான் திரையுலகிற்கு வந்ததற்கு என் அப்பாவும், அண்ணனும் காரணம். இதில் ரஜினி மருமகன் என்கிற அந்தஸ்து எங்கிருந்தது வந்தது.

அந்த அந்தஸ்தால் எனக்கு ஒரு பலனும் இல்லை. அவருக்கு மருமகனாக வேண்டும் என்று நான் விரும்பியதே இல்லை என்றாராம்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )