BREAKING NEWS

சினிமா

ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்கிறாரா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வந்த தகவலை, நடிகர் சிம்பு தரப்பு மறுத்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ’பயணி’ (இந்தியில்’முசாபிர்’) என்ற வீடியோ இசை ஆல்பத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே இவரும் கணவர் தனுஷும் பிரிவதாக அறிவித்தனர். இது திரைத்துறையிலும் ரசிகர்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வார தொடக்கத்தில் உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே அவர், அடுத்து படம் இயக்க இருப்பதாகவும் அதில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஐஸ்வர்யா சொன்னக் கதையை கேட்ட சிம்பு, படத்தில் நடிக்க உடனடியாக சம்மதம் தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது. சினிமாவில் தனுஷின் போட்டியாளராகக் கருதப்படும் சிம்பு நடிப்பில், ஐஸ்வர்யா படம் இயக்க இருப்பதாக வந்த தகவல், பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் படம் பற்றி சிம்பு தரப்பில் விசாரித்தபோது, அப்படியொரு திட்டம் ஏதுமில்லை என்றும் அது வெறும் வதந்திதான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )