BREAKING NEWS

சினிமா

’காலங்காலமாகவா இளையராஜாவும், பாரதிராஜாவும் வருவாங்க?’

’காலங்காலமாகவா இளையராஜாவும், பாரதிராஜாவும் வருவாங்க?’

“சினிமாவில் ஒரே ஒரு பாரதிராஜா, ஒரே இளையராஜாதான்” என்று இசை அமைப்பாளர் இளையராஜா சொன்னார்.

கே.கணேசன் இயக்கத்தில் உருவாகும் படம், ’காதல் செய்’. சுபாஷ் சந்திரபோஸ், நேகா, மனோபாலா, சுவாமிநாதன் உட்பட பலர் நடித்துள்ளனர். கானா வினோதன், குப்பன் கணேசன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா, இளையராஜா ஸ்டூடியோவில் நடந்தது.

’காதல் செய்’ விழாவில் பாரதிராஜா, இளையராஜா

இயக்குநர் பாரதிராஜா, பி.வாசு உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது இளையராஜா பேசும்போது, “எதிர்கால இளையராஜாக்களே, வருங்கால பாரதிராஜாக்களே என்று பேசுகிறார்கள். காலங்காலமாகவா இளையராஜா, பாரதிராஜா வருவாங்க. ஒரே ஒரு பாரதிராஜா, ஒரே இளையராஜாதான். இந்தப் படத்தை எடுக்கக் கஷ்டப்பட்டோம் என்று இங்கு பேசினார்கள். படத்தை எடுக்க எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம். பார்ப்பவர்கள்தான் கஷ்டப்படக் கூடாது. நல்லப் படங்களை எடுக்க வேண்டும். இந்தப் படத்துக்கு ‘காதல் செய்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நானும் காதல் செய்ய முயற்சி செய்கிறேன். நான் ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கிறேன். எதை காதலிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்” என்றார்.

பாரதிராஜா பேசும்போது, “காதல்தான் மனதை வளப்படுத்துகிறது. பெரிய கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு கண்டிப்பாகக் காதல் இருந்திருக்கும். இளையராஜாவுக்கும் இருந்திருக்கும். அது இல்லாவிட்டால் உலகம் இயங்காது. இந்தியாவில், தமிழகத்தின் பெரிய சொத்துகளில் ஒன்று இளையராஜா” என்றார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )