செங்கம் அருகே பள்ளிப்பட்டு ஆலயத்தில் அமைந்துள்ள ஏழு சாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பள்ளிப்பட்டு அருகே ஸ்ரீசொக்கநாயகி சமேத சொக்கநாத சுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர், நாகதேவதை, வேடியப்பன்,

முனியப்பன் அம்சார் அம்மன் சப்த கன்னிகள் உள்ளிட்ட ஏழு ஆலயங்களுக்கு கும்பகோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு பின்னர் ஆலயத்தின் உச்சியில் இருந்த கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்து தீர்த்தம் தெளித்த பின்னர்

ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த சொக்க நாயகி சமேத சொக்கநாத சுவாமியை செங்கம் சுற்று வட்டார பகுதிகளான மேல்செங்கம் நீப்பத்துறை இளங்குன்னி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
TAGS தமிழ்நாடு
