செங்கம் அருகே மனைவி மீது சந்தேகத்தால் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்து பின்னர் காவல் நிலையத்தில் சரண்அடைந்த கணவர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைபாடி பகுதியை சேர்ந்த விஜீ (34) தனது மனைவி செல்வியின் (30) நடைத்தை மீது சந்தேகத்தால் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த விஜிக்கும் அவர் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது அருகில் வைத்திருந்த சுத்தியலால் தலையில் அடித்ததில் செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெல்லத்தில் பலியானார் பின்னர் மேல் செங்கம் காவல் நிலையத்தில் கணவர் விஜீ சரண்அடைந்தார்.
பின்னர் இது குறித்து மேல் செங்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக்மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கணவன் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.