BREAKING NEWS

செய்தி சேகரித்த செய்தியாளரை வீடியோ எடுக்க விடாமல் ஒருமையில் பேசி மிரட்டிய காவல்துறை அதிகாரி

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவையொ .ட்டி கம்பம் ஆற்றில் விடும் விழாவில் செய்தி சேகரித்த செய்தியாளரை வீடியோ எடுக்க விடாமல் ஒருமையில் பேசி மிரட்டிய காவல்துறை அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம் ஆற்றில் விடும் பகுதியில் காவல் துறையினர் போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததால் கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டு பெண்கள் கீழே விழுந்தனர். இதை வீடியோ எடுத்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தடுத்து நிறுத்திய
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேமானந்தன் சீன் கிரியேட் பண்றியா உனக்கு என்ன வேலை, உன்னை யார் உள்ளே விட்டது என ஒருமையில் தரக்குறைவாக பேசி செய்தியாளரை செய்தி சேகரிக்க விடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடும் விழா வாத்தியங்கள் முழங்க, அதிர்வேட்டு ஒலிக்க அதிவிமர்சியாக நடைபெற்றது.

கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பெருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

வழக்கம் போல இந்த ஆண்டு கடந்த 12- ஆம் தேதி கம்பம் நடுதலுடன் வைகாசி பெருவிழா தொடங்கியது.

கரூர் பாலம்மாள் புரத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கம்பம் கொண்டு வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அமராவதி ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. கோவிலில் கம்பம் நடப்பட்டது.

அன்று முதல் தொடர்ந்து 15 நாட்கள் நாள்தோறும் பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். 17ம் தேதி பூச்செரிதல் விழா, 19ம் தேதி காப்பு கட்டுதல், 27ம் தேதி திருத்தேர் என ஏராளமான நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் 27, 28, 29 ம் தேதிகளில் அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம், மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் விழா இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவிலில் இருந்து கம்பம் எடுக்கப்பட்டு அலங்கார ரதத்தில் பூசாரிகள் சுமந்தவாறு கம்பம் ஆற்றுக்கு அனுப்பப்பட்டது.

வழிநெடுக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அமராவதி ஆற்றுக்கு வந்ததும் அங்கு நீர் நிரப்பப்பட்ட அகழியில் கம்பம் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரமாண்டமான வாண வேடிக்கை நடைபெற்றது. விண் அதிரும் வகையில் வண்ண, வண்ண வாண வேடிக்கை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர், நாமக்கல் சேலம், ஈரோடு திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கம்பம் ஆற்றில் விடும் பகுதியில் கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக திடீரென ஒரு பெண் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இந்த பெண்மணியை காவல்துறையினர் சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர்.

இதை செய்தி சேகரித்த மூன் டிவி தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடியோ எடுக்க விடாமல் தடுத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேமானந்தன் என்பவர் செய்தியாளரை பார்த்து சீன் கிரியேட் பண்றியா? உனக்கு என்ன வேலை. உன்னை உள்ளே விட்டது யார்? என ஒருமையில் தரக்குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிய காவல்துறையினர் தடிகளை தூக்கி மக்களை விரட்டி அடித்தனர். இதனால், மக்கள் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடி பொதுமக்கள் ஒருவருக்கு மேல் ஒருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை அதிகாரிகள், அவர்கள் குறையை மறைக்க செய்தியாளர்களை மிரட்டிய செயலுக்கு உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS