சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பேச்சு…
பா.ஜ.க திருட்டு கட்சி, அங்கு திருடர்கள், ரௌடிகள் உள்ளிட்டோர்கள்தான் உள்ளனர்.சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பேச்சு…
இந்தியா கூட்டணியின் சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து,மெட்டி ஒலி புகழ் நடிகர் போஸ் வெங்கட் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்பரை வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார்.
அப்போது,ஓமலூரை அடுத்த கருப்பூர் பகுதியில் நேற்றிரவு வாக்கு சேகரித்த அவர் பாஜக திருட்டு கட்சி, அங்கு திருடர்கள், ரௌடிகள் உள்ளிட்டோர்கள்தான் உள்ளனர் என்றும்,திமுகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும், பாரதிய ஜனதா கட்சிக்கும், அதிமுகவிற்கு ஏன் வாக்கு அளிக்க கூடாது எனவும் பரப்பரை செய்தார்.
அப்போது,திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் நடிகர் போஸ் வெங்கட்டிற்கு சால்வை அணிவித்தும்,அவருடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்…
தொடர்ந்து நடிகர் போஸ் வெங்கட் செய்தியாளர்களுக்கு பேட்டியித்தார்