டெல்டா தொகுதிக்கு அமைச்சரை கொடுக்க 2 வருடம் ஆகி விட்டது, பாஜக வேட்பாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு
தஞ்சாவூரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர்
ரஜினிகணேசன் தலைமையில் நிர்வாகிகள், ரசிகர்கள் என தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர், பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக வேட்பாளர் முருகானந்தம் கூறும்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ஊழல், வாரிசு அரசியல், போதை கலாச்சாரம் ஆகியவற்றைப் பார்த்து மிகப் பெரிய வெறுப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது, பாஜக வெற்றி பெற்றால் தொகுதி வளர்ச்சிக்கு திட்டங்கள் கொண்டுவரப்படும், திமுக ஜெயித்தால் பார்லிமென்ட்க்கு சென்று வடை சாப்பிடலாம், கடந்த முறை வெற்றி பெற்று தொகுதிக்கு என்ன செய்துள்ளார்கள் என்றும் முதலமைச்சர் டெல்டாகாரன் என்று கூறுகிறார், ஆனால் டெல்டா தொகுதிக்கு அமைச்சரை கொடுக்க 2 வருடம் ஆகிவிட்டது என்றும் திமுக கட்சியினரே திமுக எம்எல்ஏவை வாக்கு கேட்க அழைத்து வராதீர்கள் என்று சொல்லும் போது அவருடைய பணி எந்த அளவிற்கு இருக்கும் என்றும் கூறினார்.