BREAKING NEWS

தஞ்சை மாவட்டம் முள்ளூர்பட்டிக்காடு அருள்மிகு விசாலட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் வான வேடிக்கை முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் முள்ளூர்பட்டிக்காடு அருள்மிகு விசாலட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் வான வேடிக்கை முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் முள்ளூர்பட்டிக்காடு அருள்மிகு விசாலட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் வான வேடிக்கை முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.7 கருட பகவான் வானில் வட்டமிட புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டன.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள முள்ளூர் பட்டி காடு கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு. விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

பழமையான இக்கோவில் கிராம மக்கள் சார்பில் பல லட்சம் மதிப்பில் புரைமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று நடைப்பெற்றது.இதனையொட்டி, 7ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது.இன்று நான்காம் கால யாக பூஜை பூரணாகதியுடன் நிறைவு பெற்றது.தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டது.

சிவகனங்கள், மங்கள வாத்யங்கள் இசையுடன் சிவாச்சாரியர்கள் கலச நீரை ஊர்வலமாக எடுத்து வர வழிநெடுக மக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.

மூலவர் சன்னதி மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றினர்.

அப்போது. வானில் 7 கருட பகவான்கள் வட்டமிட்டன வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகத்தை ஏராளமானவர்கள் கண்டு வழிபட்டனர்.

CATEGORIES
TAGS