BREAKING NEWS

தனியார் தார் பிளான்ட்டால் மக்களுக்கு பாதிப்பு நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் மனு

மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டான் ஊராட்சி கீழப்பள்ளக்கொல்லை கிராமத்தில் கருங்கல், ஜல்லி, தார் கலவை போடும் தனியாரின் பவர் தார் பிளான்ட் இயங்கி வருகிறது. இதன் தாக்கத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிலிருந்து உருவாகும் அசுத்த காற்றின் மூலமாக மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல், தோல் நோய் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

தார் பிளான்டிற்கு நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்வதால் அந்த பகுதி முழுவதும் தூசிகள் படிந்து சுற்றுசூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியினர் பலர் கூலித்தொழிலாளர்கள் என்பதால் மருத்துவமனைக்கு சென்று வருவதால் பொருளாதார இன்னலுக்கும் ஆளாகின்றனர்.

மேலும், இந்த தார் பிளான்டின் தாக்கத்தால், விளைநிலங்கள், தாவர வகைகள் மற்றும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அந்த கிராமத்து மக்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட பவர் தார் பிளான்ட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மனு அளித்தனர்.

https://youtu.be/On3M-bF0ViI

CATEGORIES
TAGS