தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் அலுவலகத்துக்கு முன்பாக தரையில் அமர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் கூறும்போது, தேர்தல் நடத்தை விதி முறைகள் மக்கள் நலனுக்கு எதிரானது.
தேர்தல் முடிவடைந்த பிறகும் விதிமுறைகளை கடைபிடிப்பது ஜனநாயக பணிகளை தடுப்பதாக உள்ளது.
எனவே தேர்தல் ஆணையம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு எம்எல்ஏ அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.