தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ் கே தேவர் தலைமையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மக்கள் மீது பெரும் சுமையாக பல்வேறு வரிகளை உயர்த்தி வருகிறது குறிப்பாக பால் கட்டண உயர்வு வீட்டு வரி உயர்வு சொத்து வரி பத்திரப்பதிவு கட்டண உயர்வு குடிநீர் கட்டண உயர்வு என மூன்று ஆண்டுகளாக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் தற்போது மின்சார கட்டணம் உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் சிறுகுரு வியாபாரிகள் தொழில் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே தமிழக அரசு மின்சார கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்