தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் கட்டுமானப் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தரங்கம்பாடியில் ரூ. 177 கோடி செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த துறைமுகத்தில் 800 பைபர் படகுகள், 225 எந்திர படகுகள் மற்றும் கட்டுமரங்கள் நிறுத்தும் வசதி, சேமிப்புக் கிடங்கு, மீன் இறங்கு தளம், ஏலக் கூடம், படகுகள் பழுதுபார்க்கும் இடம், ஓட்டல்கள் மற்றும் ஏடிஎம் மையம், கடைகள், கழிவறைகள், சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.
இந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். கடலில் கருங்கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர், சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அவருடன் மீன்வளத்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சி மன்றத்தலைவர் சுகுண சங்கரி, துணை தலைவர் பொன்.ராஜேந்திரன், பேரூராட்சி திமுக செயலாளர் முத்துராஜா மற்றும் தரங்கம்பாடி மீனவ பஞ்சகத்தார்கள் தரங்கம்பாடி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
படவிளக்கம் :தரங்கம்படியில் மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணியை நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்