தரங்கம்பாடி அடுத்து அரசூர் கிராமத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அருகே சின்ன அரசூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது.
பொறையார் அருகே சின்ன அரசூர் கிராமத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயிலில் நிகழாண்டு வைகாசி திருவிழா கடந்த 3 – ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதனையடுத்து 10 ஆம் தேதி காலை 11 மணி அளவில் சின்ன அரசூர் விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மாலை பக்தர்கள் அலகு காவடி, பறவைக் காவடிகள் எடுத்து வந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. காளியாட்டம், வானவேடிக்கை மற்றும் கிராமிய தப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பூம்புகார் எம் எல் ஏ நிவேதா.எம். முருகன், சிசேல் நாட்டை சார்ந்த தொழிலதிபர் மருத்துவர் ராமதாஸ் சகோதரர்கள் அறக்கட்டளை தலைவர் கருணாநிதி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலா அருள் செல்வன், ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..