தலைப்பு செய்திகள்
காட்டுத் தீ பரவலை தடுப்பது எப்படி: விழிப்புணர்வு நிகழ்ச்சி.

ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தை புலி, யானை, மான், காட்டெ றுமை, செந்நாய் உள்ளிட்ட பல் வேறு அரிய வகை விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகளும், அரியவகை மரங்களும் உள்ளன.

இந்நிலையில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் திடீரென காட்டு தீ பரவுவதை தடுக்க வனத்துறையினரால் வனக் கோடுகள் ஏற்படுத்தப்படும். இந்நிலையில் இம் மாதிரியான காட்டு தீ ஏற்படும்போது அதை தடுக்க வனத்துறை யினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவ துண்டு. இதன்படி உடுமலை மற்றும் அமராவதி உள்மண்டலப் பகுதி வனச்சரகங்களிலும் மேலும் வெளி மண்டல பகுதிகளிலும் காட்டு தீ பரவலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் உடுமலை வனச்சரகத்தில் பல்வேறு செட்டில் மெண்ட் பகுதிகளிலும், தமிழக-கேரள எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளிலும் தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒலி பெருக்கி மூலமாகவும், துண்டறிக்கைகள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வனப் பணியாளர்களுக்கு காட்டுத் தீ ஏற்பட்டால் உடனடி அதை அணைப்பது எப்படி என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும் வனப் பணியாளர்களுக்கு தேவையான காலணிகள், உடைகள் அப்போது வழங்கப்பட்டது. மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் க.கணேஷ்ராம், மற்றும் வனச் சரக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
