BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பள்ளி மேலாண்மை குழுகூட்டத்திற்கு பெற்றோர்களுக்கு அழைப்பு.

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி வருகின்ற 20 மார்ச் ஞாயிற்று கிழமை அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட உள்ளது.

அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கல்வியாளர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இளைஞர் நற்பணி மன்ற நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. பள்ளிக்கான தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளை ஏற்படுத்த இந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது .

என்பது குறித்த கருத்துக்களை உடைய அழைப்பிதழை அனைத்து பெற்றோர்களுக்கும் அவரவர் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி, ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் அனைத்து பெற்றோர்களுக்கும் அழைப்பிதழை வழங்கி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )