BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மிகுந்த கண்டிப்புடன் முதல்வர் ஸ்டாலின் பேசியதாகவும், சில முக்கிய அறிவுரைகளை அப்போது அவர்களுக்கு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மிகுந்த கண்டிப்புடன் முதல்வர் ஸ்டாலின் பேசியதாகவும், சில முக்கிய அறிவுரைகளை அப்போது அவர்களுக்கு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.. கூடவே சில கண்டிப்புகளையும் காட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 18-ம்தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.. இது தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ள நிலையில், அக்கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும், பிரச்னைகளுக்கும் எவ்வாறு பதிலளிக்க வேண்டும், மக்கள் நலன்சார்ந்த விஷயங்களை எவ்வாறு சட்டப்பேரவையில் பேச வேண்டும், எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் வேறு சில எதிர்மறை எதிர்பார்ப்புகளையும் இந்த கூட்டம் ஏற்படுத்தியிருந்தது.

காரணம், நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்வர் தன்னுடைய எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளார்.. ஏற்கனவே இப்படித்தான் பட்ஜெட் சமயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது.. அப்போது சில அறிவுரைகளையும், கூடவே முக்கியமான கண்டிப்புகளையும் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் தந்திருந்தார்.. ‘நிறைய விஷயங்களை கேள்விப்படுகிறேன்.. மாவட்ட ரீதியாக ரிப்போர்ட் வந்து கொண்டிருக்கிறது.. சில மா.செ.க்களின் செயல்பாடுகள் குறித்த புகார்களும் வருகின்றன.. இனி தொடர்ந்து இப்படி நடந்தால், கட்சி தலைமை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது’ என்று எச்சரித்திருந்தார்… காரணம், அப்போதுதான் நகர்ப்புற தேர்தல் முடிவுகள் வெளியாகி சில சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. காரணம், நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்வர் தன்னுடைய எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளார்.. ஏற்கனவே இப்படித்தான் பட்ஜெட் சமயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது.. அப்போது சில அறிவுரைகளையும், கூடவே சில கண்டிப்புகளையும் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் தந்திருந்தார்.. ‘நிறைய விஷயங்களை கேள்விப்படுகிறேன்.. மாவட்ட ரீதியாக ரிப்போர்ட் வந்து கொண்டிருக்கிறது.. சில மா.செ.க்களின் செயல்பாடுகள் குறித்த புகார்களும் வருகின்றன.. இனி தொடர்ந்து இப்படி நடந்தால், கட்சி தலைமை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது’ என்று எச்சரித்திருந்தார்.

அத்துடன், மக்களுடன் நெருங்கி, மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து தொகுதிகளில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.. இப்போது நகர்ப்புற தேர்தல் ரிசல்ட்கள் வந்த நிலையில், மாவட்டங்களில் நடந்த சில விவகாரங்கள் குறித்தும், முதல்வருக்கு ரிப்போர்ட் போனதாக ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில், இது தொடர்பாக ஏதாவது முதல்வர், திமுக எம்எல்ஏக்களிடம் பேசக்கூடும் அல்லது விசாரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான், சென்னை அறிவாலயத்தில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது.

சமீபகாலமாகவே அதிமுக, பாஜக இரு தரப்புமே, திமுக மீதான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருவதாலும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும் கேள்விகளை எதிர்தரப்பு எழுப்ப வாய்ப்புள்ளதாலும், திமுக அரசு மீது மற்றும் துறைவாரியான கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினால், அதற்கு முழு தரவுகளோடு புள்ளிவிவரங்களை தர வேண்டும் என்றும், அவர்களின் விமர்சனங்களுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளையும் முதல்வர் தன்னுடைய எம்எல்ஏக்களுக்கு வழங்கியதாக தெரிகிறது.

மேலும், பட்ஜெட் மீதான விவாதத்தில் யார் யார் பேசுவது, எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது… மேலும் முதல்வர் எம்எல்ஏக்களிடம் பேசும்போது, ‘சபையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தால், அவர்களை எதிர்த்து பேசும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்… எதிர்க்கட்சி என்ற முறையில், அதிமுக அப்படி நடந்து கொள்வது வழக்கமானது..

வரும் 26ம் தேதிக்குள், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராகவும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் வெற்றி பெற்ற, திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.வரும் 30ம் தேதி நடைபெறும் மண்டலக் குழு தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளை வழங்க வேண்டும்… மறைமுக தேர்தலில் யார் யார் என்ன தவறு செய்தீர்கள் என்பது ஆதாரத்துடன் என்னிடம் இருக்கிறது… அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால், நடவடிக்கை எடுப்பேன்’ என்று எச்சரிக்கை விடுத்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )