தலைப்பு செய்திகள்
மார்ச் 31-க்குள் 14.40 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்.
மார்ச் 31-ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ், 5 சவரன் நகை திருப்பி தரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்தது. நகைக்கடன் தள்ளுபடியில் திமுக அரசு சொன்னதை செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதே நேரத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் இன்னும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 31-ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ், 5 சவரன் நகை திருப்பி தரப்படும் என்றும் விடுபட்ட தகுதியான நபர்கள் விண்ணப்பித்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும், பலகட்ட சோதனைகள் மூலம் நகைக்கடன் அனைத்தும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் போலி ஆவணம், போலி நகைகள் மூலம் நகைக்கடன் பெற்ற நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.