தலைப்பு செய்திகள்
நடராஜன் நான்காம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி.

தஞ்சாவூர் விளார் அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள புதிய பார்வை முன்னாள் ஆசிரியரும் சசிகலா கணவருமான ம.நடராஜனின் நினைவிடத்தில் காலை 6 மணிக்கு நடராஜனின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சமாதியில் தீபம் ஏற்றி மலர் தூவி அவரது புகைப்படத்திற்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு பசு கன்றுக்கு கோ பூஜை செய்தார்.

அவருடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் சகோதரர் ராஜா மற்றும் நடிகை சிஆர்.சரஸ்வதி முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்
