BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இந்தியா முழுவதும் மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தை தொடர்பான பிரச்சார கூட்டம் சிஐடியு, விசிக தொழிற்சங்கத்தினர் பங்கேற்பு.

இந்தியா முழுவதும் வருகிற 28, 29ம் தேதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிஐடியு, ஏஐடிசியூ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி, தொழிற்சங்கம், மற்றும் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பான பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கத்தினர், சிஐடியு மற்றும் காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 28 ம்தேதி காலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு நடைபெற உள்ள மறியல் தொடர்பான பிரச்சார கூட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் கலந்துகொண்டு கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார்.


இந்தப் பிரச்சார இயக்கத்தில் தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், மின்சாரச் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.

இந்த பிரச்சார கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பகுதி செயலாளர் ஆல்பர்ட்ராஜ், தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகி சுரேஷ், சிஐடியூ நிர்வாகி அன்பு, காந்தி மார்க்கெட் சுமைப் பணி சங்கத்தின் நிர்வாகி ராமர், உட்பட 50க்கு மேற்பட்ட தொழிலாளர்கள். கட்சியினர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )