தலைப்பு செய்திகள்
துபாய் பயணத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை.. சென்னை திரும்பிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி.
சென்னை: துபாய் பயணத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.6,100 கோடி ஈர்க்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். துபாய், அபுதாபி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நள்ளிரவு 2.30 மணிக்கு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து விளக்கிப் பேசி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். மேலும் இந்த பயணம் வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழலை முதலீட்டாளர்கள் மத்தியில் எடுத்து கூறியதாக அவர் தெரிவித்தார்.
இந்த பயணத்தில் ரூ.6,100 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், இதன் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார். கடந்த அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்களாக மட்டுமே இருந்ததாக கூறிய ஸ்டாலின், ஆனால் இந்த ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார். அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது பற்றி கவலை இல்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.