BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சை திருவாரூர் , நாகை பகுதிக்கு விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ஏழு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவின்பேரில், ஏ.டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் , சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன் மற்றும் போலீசார் இளையராஜா , சுந்தர் ராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு தஞ்சைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்டில் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன், அய்யர்சாமி, பாஸ்கர், பேச்சியம்மாள், தங்கமாயன், சின்னசாமி, ஒச்சம்மால் என்பதும் 40 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

தனிப்படை போலீசார் மற்றும் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க உறுதுணையாக இருந்த சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோருக்கு தஞ்சை சரக டிஐஜி கயல்விழி , மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )