தலைப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மீது வழக்கு பதிவு!! தொடரும் அரசியல் கலாட்டாக்கள்!!
தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் . இவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
இதனை கண்டித்து அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், கண்டன ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டையில் சொத்து வரி உயர்வை கண்டித்து நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அதிமுகவினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.