தலைப்பு செய்திகள்
`நான் கோபாலபுரத்து விசுவாசி; இந்த துறையை கேட்டுப்பெற்றேன்’

“நான் கோபாலபுரத்து விசுவாசி. நான் இந்த துறை வேண்டும் என நீர்வளத்துறையை கேட்டுப் பெற்றேன்” என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், தடுப்பணை கட்டுவதில் தமிழக அரசு முனைப்பு காட்டும் எனக் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீது பதிலுரை பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “இன்று பேரவையில் பேசுவதில் மனமகிழ்ச்சி அடைகிறேன். நான் கோபாலபுரத்து விசுவாசி. நான் இந்த துறை வேண்டும் என நீர்வளத்துறையை கேட்டுப் பெற்றேன். அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்டலாம். இது கருணாநிதி திட்டம். தடுப்பணை கட்டுவதில் தமிழக அரசு முனைப்பு காட்டும்.
CATEGORIES முக்கியச் செய்திகள்

