BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

குஜராத் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து- 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி.

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் தகேஜ் தொழிற்பூங்காவில் மிகப்பெரிய ரசாயன தொழிற்சாலை உள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

சுத்திகரிப்பு பணிகள் நடந்தபோது தொழிற்சாலை பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது. இதனால் அந்த தொழிற்சாலையின் ஒரு பிரிவுக்குள் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அந்த பிரிவில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினார்கள். அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதால் இருளில் தப்ப முடியாமல் 6 பேர் சிக்கிக் கொண்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆமதாபாத் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. கடும் போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.


என்றாலும் உள்ளே சிக்கிய 6 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தீயில் கருகி பலியானார்கள். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )