தலைப்பு செய்திகள்
`இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்; ஏ.ஆர்.ரகுமான் கருத்தை ஆதரிக்கிறோம்’
சொல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இந்தி திணிப்பதை தமிழக பாஜக ஏற்காது என்றும் ஏ.ஆர்.ரகுமான் கருத்து சொல்வதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களுடைய நிலைபாடு இந்தி திணிப்பதை தமிழக பாஜக ஏற்காது. குறிப்பாக நமது தேசிய கல்விக்கொள்கை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரைக்கும் தமிழ் மொழியில்தான் நீங்க படிக்க வேண்டும் என்று தமிழக அரசு கொண்டு வராதபோது, மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள்கூட இத்தனை ஆண்டுகளாக கொண்டுவரவில்லை. கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தபோது ஏன் கட்டாய தமிழ் கல்வியை கொண்டு வரவில்லை. அதற்கு ஒரு நரேந்திர மோடி தேவைப்பட்டாரா?
CATEGORIES முக்கியச் செய்திகள்
