BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கோவில்பட்டி நகராட்சி தேர்தல் முடிந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி நகராட்சி , கழுகுமலை, கயத்தார், எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய 5 பேரூராட்சிகளில் 175 வாக்குசாவடி மையங்களில், 1,32,730 வாக்காளர்கள்  உள்ளனர்.

535 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்தது. வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சீல் வைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டடுள்ளது. அந்த வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி நகராட்சி வாக்குப்பதிவு இயந்திரம் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இதேபோல் கயத்தார், எட்டையாபுரம், விளாத்திகுளம் ,புதூர், கழுகுமலை ஆகிய பேரூராட்சிகள் உள்ள அரசு பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )