தலைப்பு செய்திகள்
3 நாட்களுக்கு பிறகு மீண்டும் மது கடைகள் திறப்பு..!
தமிழகத்தில் நேற்று 19ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூன்று நாட்கள் மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அரசின் உத்தரவின்படி 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது இன்று 20ம் தேதி மதியம் மீண்டும் திறக்கப்பட்டது அதனையடுத்து கூட்டம் அலைமோதியது.
மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது அந்த நாள் மட்டும் மீண்டும் மதுக்கடைகள் மூடப்படும் என கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் மக்கள் பையைக் கொண்டு வந்து பை முழுவதும் பாட்டில்கள் வாங்கி செல்கின்றனர் மேலும் 22 ஆம் தேதி விடுமுறை என்பதால் மீண்டும் பலர் கூட்டம் கூட்டமாய் வருகின்றனர்.
CATEGORIES Uncategorized