தலைப்பு செய்திகள்
இங்கிலாந்து ராணியின் பாதுகாப்பு பகுதிக்குள் புகுந்த மர்ம நபர்!! தடுமாறும் பிரிட்டன் ராணுவம்!!

இங்கிலாந்து ராணுவ வீரர்களுடன் ஒரு கருப்பு ஆடு ஒரு நாள் இரவு முழுவதும் தங்கிவிட்டு சென்றுள்ளது. இதனால் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பாதுகாப்பில் கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் எபபோதும் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் தங்குவது வழக்கம். இவரின் பாதுகாப்பு வீரர்கள், லண்டன் ஷீட் தெருவில் உள்ள விக்டோரியா குடியிருப்பில் தங்கியுள்ளனர். இந்த ராணுவ குடியிருப்புக்குள் அன்னியர் யாரும் உள்ளே நுழைய முடியாமல் பலத்த கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளது.

இந்நிலையில் இந்த கண்காணிப்பு வளையத்துக்குள் மண்ணை தூவி சமீபத்தில் பாதிரியார் என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஆசாமி உள்ளே நுழைந்துள்ளார். மேலும் இங்கு தங்கிள்ள ஒரு ராணுவ உயர் அதிகாரியின் நண்பர் என்றும் தன்னை கூறிக் கொண்டார்.
இதனால் ராணுவ காவலர்கள் அவரிடம் எந்த சோதனையையும் நடத்தாமல் ராணுவ குடியிருப்புக்குள் அனுமதித்துள்ளனர்.
அங்கு அந்த ஆசாமி ராணுவ வீரர்களுடன் சேர்ந்து மது குடித்து, உணவு சாப்பிட்டு விட்டு குதூகலமாக இரவு முழுவதையும் அங்கேயே கழித்துவிட்டு நன்றாக உறங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டார்.

அந்த மர்ம ஆசாமி சென்ற பிறகுதான், அவரை அங்கிருந்த ராணுவ உயர் அதிகாரிகள் யாருக்கும் அவரை யார் என்றே தெரியாது என்ற செய்தி வெளியானது. அவர் யார் என்ன என்பது குறித்து உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
ஒரு நாள் இரவு முழுவதும் மர்ம ஆசாமி ஒருவர், ராணுவ வீரர்களுடன் ஒன்றாக தங்கியிருந்த சம்பவத்தினால் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் ராணுவ வீரர்களின் குடியிருப்பில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி, பங்கிங்காம் அரண்மனையில் எதிரொலிக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
