தலைப்பு செய்திகள்
தஞ்சையில்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அசிஸ் மிஸ்ரா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அசிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை கண்டித்து இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், அவரது மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும், டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.