BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

`அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண உறுதியேற்போம்’

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.

உலகத் தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி பல்வேறு மாநில தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி – அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்’ என்று கூறியுள்ளார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )