BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் பைக், டாக்சிக்கு அனுமதியில்லை!! அதிரடி உத்தரவு!

தமிழக போக்குவரத்துவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் பைக் டாக்சி குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் காட்வின் ஷட்ராக் என்பவர், தமிழகத்தில் பைக் டாக்சிகள், வணிக நோக்கத்திற்காக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறதா என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பொதுத் தகவல் அதிகாரி கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி மின்சார வாகனங்கள் உள்பட அனைத்து வகையான இருசக்கர வாகனங்களையும் போக்குவரத்து வாகனங்களாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு இன்னும் பைக் டாக்சிகளை சட்டப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின்படி, ‘ராபிடோ’ போன்ற பைக் டாக்சிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. மாநில அரசு பைக் டாக்சி மற்றும் கால்டாக்சிகள் போன்ற சேவைகளுக்கான விதிமுறைகளை உருவாக்கும் வரை ‘ராபிடோ’ மொபைல் செயலி தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டெலிவரி மற்றும் வணிக நோக்கத்திற்காக பைக் டாக்சிகளை பயன்படுத்த போக்குவரத்துத் துறை மற்றும் வேறு எந்த துறையிடமாவது பெறப்படும் அனுமதி தேவையா என்ற ஆர்.டி.ஐ.யில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த போக்குவரத்துத்துறை ஆணையம், ‘அத்தகையக அனுமதி எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை’’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.


‘ராபிடோ’ செயலி இருசக்கர வாகன விளம்பரத்தில் தெலுங்கு நடிகர் அல்லுஅர்ஜூன் நடித்திருந்தார். இதன் மூலம் தெலுங்கானா அரசு போக்குவரத்து பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தது. அதன் மூலம் ராபிடோ பயன்படுத்துவதற்காக விளம்பரம் செய்யப்பட்டது குறித்த சர்ச்சையில் நடிகர் அல்லு அர்ஜூன் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )