தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு குஜராத் மாடலை பின்பற்றும்! ஆவேசமான நிர்மலா சீதாராமன்!

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா ஜனவரி 14-ம் தேதி அன்று ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடப்பது வழக்கமாகும். கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான துக்ளக் 52-வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகாடெமியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், இந்தி விவகாரம், திராவிட மாடல் என பல்வேறு விவகாரங்களை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பாஜக குறித்து தவறான கருத்து தமிழ்நாட்டில் பரப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் பல பெரிய மாறுதல்கள் நாட்டில் நடந்துள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகும் வேகமாக வளரும் நாடு இந்தியா என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பு கொரோனா பெருந்தொற்று நேரத்திலும், நம் பொருளாதாரத்தை மீட்டவர் பிரதமர்.
கொரோனா காலத்தில் காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தடுப்பூசி குறித்து அவநம்பிக்கையும், தயக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள், தடுப்பூசி போட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை போட்டுக் கொண்டார்களா அல்லது வெளிநாட்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா என்பதை இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சி கண்டிப்பாக தேவை. அது, வாரிசு அரசியல் மற்றும் குடும்ப கட்சியாகவும் இருக்கும் காங்கிரஸ் கட்சியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாட்டில் இப்போது ஒவ்வொரு மாதமும் 36 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின்றன. சோசியலிசம் என்ற பெயரில் ஆட்சி செய்த காங்கிரஸ் 60 ஆண்டு காலம் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. 60 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சி செய்ததே மக்களின் துரதிருஷ்டவசமானது.
நலத்திட்டங்களை சிலருக்கு மட்டும் கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பதும் தான் திராவிட மாடல். தமிழ்நாடு அரசு விரைவில் குஜராத் மாடலை பின்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாகவும் மத்திய, மாநில அரசுக்கு இடையே சுமுக உறவில்லை என்றும் இங்கே பொய் பிரசாரம் செய்யப்படுகிறது.
பிப்ரவரி, மார்ச்சு-க்கான ஜி.எஸ்.டி., இழப்பீட்டு தொகை தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ளது; அவை விரைவில் வழங்கப்படும். என்னால் ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி கற்றுக் கொண்டு பேசினால் அதில் தவறில்லை. தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்” என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
